மோசமான வாழ்க்கை முறையால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. இதை சரிசெய்ய உதவும் உணவுகளை பார்க்கலாம்.
முதலில் மன அழுத்தத்தை குறைக்க தூக்கம் மிக முக்கியம். அதேபோல் காலை எழுந்திருத்த உடன் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ப்ரோபயோடிக் நிறைந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது மன அழுத்த பிரச்சனையை குறைக்கும். இது வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வளர்க்க உதவும்.
தயிர், மோர், பாலாடைக் கட்டி போன்ற உணவுகளில் ப்ரோபயோடிக்குகள் நிறைந்துள்ளன. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் மன அழுத்தம், எரிச்சல் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். இதன் குறைபாடு மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
சூரை, சால்மன் போன்ற மீன்களை உட்கொள்ளலாம், இது தவிர, பால் மற்றும் அதன் தயாரிப்புகள், முட்டை மற்றும் சில காய்கறிகளிலும் வைட்டமின் பி 12 உள்ளது.