சிலர் மீந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடு செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அது நல்லதல்ல. எந்த உணவுகளை சூடு செய்யக்கூடாது என்பது இங்கே.
கீரை
கீரையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் இதை அதிகமாக சூடு செய்து சாப்பிடுவது நல்லதல்ல. இது ஃபுட் பாய்சனாக மாறும்.
முட்டை
முட்டை அல்லது முட்டை சேர்க்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடு செய்ய வேண்டாம். இது வாயு ஏற்பட காரணமாக திகழும்.
பிரியாணி
பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவதால் செரிமான பிரச்னை ஏற்படும். இது செரிமான மண்டலத்தை விரைவாக பாதிக்கும்.
சிக்கன்
சிக்கனை பக்குவமாக சமைக்க வேண்டும். கூடவோ குறையவோ சமைக்கக்கூடாது. இது பாக்டீரியாவை உடலில் சேர்க்கும். மேலும் இதனை சூடு செய்யக்கூடாது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனை மீண்டும் மீண்டும் சூடு செய்வதால் உடலுக்கு தீமையாக மாறும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ஆனால் இதை சூடுபடுத்தி சாப்பிடுவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
காளான்
சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காளான் விரும்பு சாப்பிடுவார்கள். ஆனால் இதை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது வயிற்று பிரச்னையை ஏற்படுத்தும்.
போதுமான அளவுக்கு உணவு சமைத்து, அந்தந்த வேளைக்கு மட்டும் உணவை சாப்பிட வேண்டும். மீண்டும் உணவை சூடு செய்து சாப்பிடுவதை முடிந்த அளவுக்கு தவிர்க்கவும்.