சில உணவுகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய உணவுப் பழக்கங்களை பார்க்கலாம்.
வெங்காயம்
சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சோடியம் குறைவாக உள்ள வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்களின் உணவுகளில் உப்பைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள்.
பூண்டு
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காலிஃப்ளவர்
சிறுநீரக நோயாளிகளுக்கு சூப்பர் உணவாக காலிஃபிளவர் செயல்படுகிறது. கொழுப்பு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகமாக இருந்தால், அதிக நீர் சிறுநீரகங்களுக்குள் நுழைந்து அவற்றின் செயல்பாட்டை பாதிக்கிறது.
ஸ்ட்ராபெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான அமைப்பை மேம்படுத்தும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதோடு ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
ஓட்ஸ்
ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் 'பீட்டா குளுக்கன்' என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது. காலை உணவாக அவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஓட்ஸ் சாப்பிடுவது மூலம் பெறலாம்.
ரெட் கேப்சிகம்
சிவப்பு கேப்சிகத்தில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிவப்பு கேப்சிகத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கலாம். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை இதய நோய், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.