மலச்சிக்கல் பிரச்சனைக்கு எந்த உணவு நல்லது?

By Karthick M
28 Nov 2024, 21:05 IST

செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதால் வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப் பிடிப்பு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும். இதை சரிசெய்ய உதவும் உணவுகளை பார்க்கலாம்.

மலச்சிக்கலை சரிசெய்ய உலர் பாதாமி எனப்படும் Dry Apricotஐ சாப்பிடலாம். இது மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

நார்ச்சத்து அதிகம்

உலர் பாதாமி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. செரிமானத்தை மேம்படுத்த இது மிக முக்கியம். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.

இயற்கையான மலமிளக்கி

உலர் பாதாமி ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

உலர் பாதாமியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பாலிபினால்கள், பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.

போதுமான தண்ணீர்

மலச்சிக்கலைத் தடுக்கவும் நிவாரணம் அளிக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். உடலை நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.