அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் யூரிக் அமில அளவை மெதுவாக உயர்த்தலாம். எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதில் யூரிக் அமில அளவை அதிகரிக்கக் கூடிய உணவுகளைக் காணலாம்
அதிக யூரிக் அமிலம்
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சிறுநீரக கற்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பல்வேறு வலிமிகுந்த நிலைகளை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற உணவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும்
சர்க்கரை பானங்கள்
இனிப்பு பானங்கள், சோடா மற்றும் சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் போன்றவை யூரிக் அமிலத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம். எனவே கூடுதல் சர்க்கரையைத் தவிர்க்க தண்ணீர் அல்லது இனிக்காத பானங்களைத் தேர்வு செய்யலாம்
அதிக பிரக்டோஸ் பழங்கள்
பேரிக்காய், ஆப்பிள், பீச் போன்ற பழங்கள் அதிகளவு பிரக்டோஸ் கொண்டதாகும். ஆனால், அதிகப்படியான பிரக்டோஸ் உட்கொள்ளல் உடலில் யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளைக் கொண்டிருக்கலாம். இவை அனைத்திலும் யூரிக் அமில அளவை அதிகரிக்க பங்களிக்கும் சேர்க்கைகள் உள்ளது
மட்டி, கொழுப்பு நிறைந்த மீன்
கானாங்கெளுத்தி, சார்டைன்கள் போன்ற மட்டி மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில் பியூரின்கள் நிறைந்துள்ளது. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது
சிவப்பு இறைச்சி
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளில் அதிகளவு பியூரின்கள் உள்ளது. இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். இந்நிலையில் அதிகளவு சிவப்பு இறைச்சியை உட்கொள்வது கீல்வாத வெடிப்புகளை உண்டாக்கலாம்