கோடையில் உடலை அரோக்கியமாக வைத்துக்கொள்ள பாலுடன் இந்த உலர் பழங்களை கலந்து சாப்பிடவும். இது நல்ல பலனை கொடுக்கும்.
ஊறவைத்த பாதாம்
கோடையில் பாதாமை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் வயிறு குளிர்ச்சியடைவதுடன், பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
காய்ந்த திராட்சை
காய்ந்த திராட்சைகளை பல உணவுகளில் சேர்க்கலம். இதனை பாலில் கலந்து ஊறவைத்து சாப்பிடலாம். இது உங்களை கோடைகாலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நீருடன் பேரீச்சம்பழம்
கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். 2-3 பேரீச்சம்பழத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அவற்றை நறுக்கி பாலில் கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
பாலுடன் பேரீச்சம்பழம்
கோடையில், ஒரு நாளைக்கு 2-3 பேரீச்சம்பழங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பேரீச்சம்பழத்தை பாலில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அத்திப்பழம்
கோடையில், 2-3 அத்திப்பழங்களை பாலில் ஊறவைத்து, பின்னர் அவற்றை சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.