உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 5 உலர் பழங்கள் குறித்து இங்கே காண்போம்.
பாதம்
பாதாம் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் எல்டிஎல் கொழுப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. 100 கிராம் பாதாம் பருப்பில் 576 கிலோகலோரி உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
திராட்சை
திராட்சையில் அயோடின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.
வால்நட்ஸ்
100 கிராம் வால்நட்ஸ்-ல் 38 கிராம் ஒமேகா-6 உள்ளது. ஒமேகா-6 உடல் பருமனைக் குறைப்பதைத் தவிர, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.
பிஸ்தா
வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்கள் பிஸ்தாவில் காணப்படுகின்றன. பிஸ்தா சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இது தவிர, பிஸ்தா செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது.
பேரிச்சம்பழம்
பேரிச்சம்பழம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பேரிச்சம்பழம் உடலுக்கு வைட்டமின் பி ஐ வழங்குகிறது. இந்த வைட்டமின் உடலுக்கு பலம் கொடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் இந்த உலர் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.