தைராய்டு ஆரோக்கியத்திற்கு சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள வேண்டும். இதன் மூலம் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதில் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த குடிக்க வேண்டிய பானங்கள் சிலவற்றைக் காணலாம்
மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டதாகும். இது கருமிளகில் உள்ள பைபரின் முன்னிலையில் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. மஞ்சள், கருமிளகு, பால் கொண்டு தயார் செய்யப்படும் மஞ்சள் பால் தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
மோர்
இது புரோபயாடிக்குகள் நிறைந்த மூலமாகும். இது குடல் மைக்ரோஃப்ளோராவை மேம்படுத்த உதவுகிறது. வலுவான, ஆரோக்கியமான குடல் இயக்கம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக வீட்டில் தயார் செய்யப்பட்ட புதிய மோரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
சிவப்பு சாறு
பீட்ரூட், கேரட்டின் கலவையானது பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றியான லைகோபீனின் நல்ல மூலமாகும். புதிதாக தயாரிக்கப்பட்ட சிவப்பு சாறு அருந்துவதன் மூலம் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
பச்சை சாறு
இலைக் கீரைகளில் குளோரோபில் நிறைந்துள்ளன. இது குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டதாகும். புதிய கீரை, புதினா, கொத்தமல்லி இலைகள் போன்ற பல்வேறு இலைகளைத் தேர்ந்தெடுத்து, வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சாறு தயார் செய்யலாம்
ஆப்பிள் சைடர் வினிகர்
இது காரத்தன்மை கொண்டதாகும். 1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீருடன் கலந்து குடிப்பது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது
வெள்ளரிக்காய் நீர்
வெள்ளரிக்காய் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவதில் குறிப்பாக நன்மை பயக்கும். ஏனெனில் இது உடலை சுத்தப்படுத்தவும் நச்சு நீக்கவும் உதவுகிறது
எலுமிச்சை நீர்
உடலை சமநிலைப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் சூடான எலுமிச்சை நீர் அருந்தலாம். இது வைட்டமின் சி மற்றும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியின் சிறந்த மூலமாகும். இவை உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் உதவுகிறது