இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இரும்புச்சத்து அமைகிறது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. இதில் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவும் இரும்புச்சத்து நிறைந்த பானங்களைக் காணலாம்
பீட்ரூட், ஆரஞ்சு ஸ்மூத்தி
பீட்ரூட் ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமானது. மேலும், ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இந்த ஸ்மூத்தியானது ஆற்றல் அளவை ஆதரிக்கவும், இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கவும் உதவுகிறது
கொடிமுந்திரி சாறு
ப்ரூன் அல்லது கொடிமுந்திரி சாறு இரும்புச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின் சியும் நிறைந்ததாகும். இது இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. தினமும் ஒரு கிளாஸ் கொடிமுந்திரி சாறு அருந்துவது உடலின் இரும்புச்சத்து அளவை அதிகரித்து இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது
மாதுளை சாறு
மாதுளை இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஆதரிக்கிறது மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. மாதுளைச் சாற்றைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இயற்கையாகவே இரும்புச்சத்துக்கள் அதிகரிக்கிறது
கீரை, அன்னாசி ஸ்மூத்தி
பசலைக் கீரையில் ஹீம் அல்லாத இரும்புச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. இது தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுகிறது. மேலும் அன்னாச்சிப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது இரும்பை மிகவும் திறம்பட உறிஞ்ச உதவுகிறது. இது இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும்
நெல்லிக்காய், முருங்கை ஸ்மூத்தி
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இது உடல் இரும்பை உறிஞ்ச உதவுகிறது. மேலும், முருங்கை உட்கொள்வது இரும்பின் மற்றொரு சிறந்த மூலமாகும். இவை இரண்டையும் ஒன்றாக இணைப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது