கோடையில் புத்துணர்ச்சியாக இருக்க இந்த பாங்களை குடிக்கவும்

By Ishvarya Gurumurthy G
17 Apr 2024, 11:30 IST

கோடைகாலத்தில் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த பானங்களை முயற்சிக்கவும். இது நல்ல பலனை தரும்.

இளநீர்

வயிற்றுப்போக்கு மற்றும் உடற்பயிற்சி போன்ற சமயங்களில், உடலில் இருந்து நிறைய தண்ணீர் வெளியேறுகிறது. கோடையில் இது மிகவும் தீவிரமாகும். இந்நிலையில், தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

எலுமிச்சை ஜூஸ்

இது வைட்டமின் சி நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.

மாதுளை ஜூஸ்

மாதுளை சாறும் நீரேற்றம் பண்பு உடையது. பல ஆய்வுகளில் இது இதயம், மூளை மற்றும் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது வியர்வையால் ஏற்படும் திரவ இழப்பை சமன் செய்வதோடு இரும்புச்சத்தையும் வழங்குகிறது.

கிரீன் டீ

நீங்கள் கிரீன் டீ குடிப்பவராக இருந்தால் மகிழ்ச்சிக் கூறிய விஷயம். அது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

நீர் மோர்

குளிர்ந்த மோர் கோடைக்காலத்துக்கு இனிமையான பானம். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

சீரக நீர்

சீரகம் உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம். சீரக விதைகளில் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.