நம் உடலுக்கு தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை விட குறைந்தால், உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
பலர் காரமான உணவுகளுடன் தண்ணீரையும் குடிப்பார்கள். இது செரிமான செயல்முறையை கெடுக்கும். வயிற்று வலி அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
வெயிலில் இருந்து வந்தவுடன் தண்ணீர் குடித்தால், சளி, உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படலாம். சூரிய ஒளியின் காரணமாக உடல் சூடாக இருக்கும். உடனடியாக குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது.
உடற்பயிற்சியின் போது உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், தண்ணீர் குடிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது.