ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் மருத்துவமனை பக்கம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், ஆப்பிள் அனைவருக்கும் நல்லது என கூற முடியாது. யார் ஆப்பிள் சாப்பிடக்கூடாது என உங்களுக்குத் தெரியுமா?
ஆப்பிள் சத்துக்கள்
ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ போன்ற சத்துக்கள் வைட்டமின்-டியுடன், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பாலிஃபீனால்கள் இதில் உள்ளன.
தூக்கமின்மை
உங்களுக்கு தூக்க பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. ஆப்பிளில் பிரக்டோஸ் மற்றும் சர்க்கரை உள்ளது. இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. எனவே, உங்களால் இரவில் தூங்க முடியாது.
வயிறு பிரச்சினை
உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிட வேண்டாம். உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து இந்தப் பழத்தை உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை பிரச்சனை
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. இந்த பழத்தில் இயற்கை சர்க்கரை உள்ளது. இது உங்கள் நிலையை மோசமாக்கலாம்.
ஒவ்வாமை பிரச்சனை
உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், ஆப்பிள் சாப்பிட வேண்டாம். இதனால் வயிறு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது?
ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் காலை அல்லது மதியம். இந்த பழத்தை மாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை ஜீரணிப்பதில் ஒருவர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.