வைட்டமின் கே, சி, பி, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, ஒமேகா -6 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்த மாதுளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், சிலருக்கு மாதுளை தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
தோல் ஒவ்வாமை
தோல் ஒவ்வாமை ஏற்பட்டால் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஒவ்வாமை பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்.
குறைந்த இரத்த அழுத்தம்
மாதுளம்பழம் குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருக்கிறது. இது நமது இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் மாதுளை சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அசிடிட்டி
நீங்கள் அசிடிட்டியால் அவதிப்பட்டால், மாதுளை சாறு குடிக்க வேண்டாம். குளிர்ச்சியான தன்மையால், செரிமானம் சரியாக இயங்காது.
சளி மற்றும் இருமல்
சளி மற்றும் இருமல் பிரச்சனையால் நீங்கள் வதிப்பட்டால், மாதுளை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக இந்த பிரச்சனை மேலும் தீவிரமடையலாம்.
மலச்சிக்கல் மற்றும் வாயு
மலச்சிக்கல், வாயு பிரச்சனை இருந்தாலும் மாதுளம் பழச்சாறு அருந்தக்கூடாது. மாதுளைக்கு குளிர்ச்சி தரும் தன்மை இருப்பதால் இது அஜீரணத்தை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் மாதுளை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதை குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்
வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடக்கூடாது, மாதுளம் பழச்சாறு குடிக்கக்கூடாது. இதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்படும்.