தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது வழக்கம். உடல் எடையை குறைக்க நம்மில் பலர் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்துவோம். உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடரை எப்போது குடிக்கணும், எப்படி குடிக்கணும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பண்புகள்
ஆப்பிள் சைடர் வினிகரில் வைட்டமின் பி, ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் போன்ற சத்துக்கள் இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதை காலையில் குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும்.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி உடலின் பலவீனத்தையும் நீக்குகிறது.
தோலுக்கு நல்லது
ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதால் சரும பிரச்சனைகள் நீங்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பரு பிரச்சனையை போக்க உதவுகிறது.
பற்களுக்கு நல்லது
ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் பற்கள் வலுவடையும். மேலும், இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். மேலும், பல நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது
ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பது இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதை குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.