படுக்கைக்குச் செல்வதற்கு முன் சோயா மில்க் குடிக்கக்கூடாது. ஏனெனில் இரவில் மனித உடலின் குடல் இயக்கம், செரிமானம் மற்றும் உறிஞ்சும் திறன் குறைவாக இருக்கும். அத்தருணத்தில் சோயா மில்க் குடிப்பது வயிற்றுப்போக்கு,வீக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
சோயா பாலை வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்றாலும், சிலருக்கு வெறும் வயிற்றில் குடிக்கும்போது வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியம் ஏற்படும். அவர்கள் சோயா பாலைக் குடிக்கக்கூடாது.
வெறும் வயிற்றில் சோயா பாலை மட்டும் குடித்தால், நமது உடல் சோயா பாலில் உள்ள புரதத்தை கலோரிகளாக மாற்றி உட்கொள்ளும், எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், வெறும் வயிற்றில் சோயா பால் மட்டும் குடிக்கக்கூடாது.
எப்போது சோயா பால் குடிப்பது நல்லது?
உடற்பயிற்சிக்கு பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு பிறகு சோயா பால் குடிப்பது ஆற்றலை அதிகரிப்பதோடு, எடையிழப்பிற்கு உதவும்.