கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் இங்கே

By Ishvarya Gurumurthy G
19 Aug 2024, 16:30 IST

கிரீன் டீயில் பல நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.

எடை குறைப்பு

உடல் எடையைக் குறைப்பதில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கிரீன் டீ ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கு உதவுகிறது. தினந்தோறும் இரண்டு கப் கிரீன் டீ அருந்துபவர்கள், 6 மாதங்களில் குறிப்பிட்ட அளவு உடல் எடையைக் குறைக்கலாம்.

தலைவலியைக் குணமாக்க

தலைவலி வந்து விட்டால், முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது டீ தான். இந்த கிரீன் டீயும் அந்த வகையையே சார்ந்தது. தலைவலி வரும் சமயத்தில் கிரீன் டீ அருந்தும் போது, குறைவான வலியை அனுபவிப்பர் என கூறப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு

பெருங்குடல் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க கிரீன் டீ உதவுகிறது. மேலும், இது மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவுகிறது.

மனச்சோர்விலிருந்து விடுபடுதல்

மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிப்பதில் கிரீன் டீ உதவுகிறது. கிரீன் டீ மனநிலையை மாற்றுவதாக அமைகிறது.

பற்கள் வெண்மையாகுதல்

பச்சை தேயிலையானது பற்களை வெண்மையாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பற்களில் இருக்கக் கூடிய பிளேக் கட்டிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த கிரீன் டீ உதவுகிறது.

கண் பாதுகாப்பு

கிரீன் டீ உட்கொள்பவர்கள், அதனை குடிக்காதவர்களை விட சிறந்த கண்பார்வையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.