குளிர்காலம் நெருங்கி வருவதால், சளி அதிகம் காணப்படலாம். இதற்கு நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது அவசியமாகும். குளிர்காலத்தில் ஜலதோஷத்தைத் தடுக்க உதவும் வைட்டமின்களைக் காணலாம்
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், வைரஸ்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. கீரை, கேரட் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவை சிறந்த ஆதாரமாகும்
வைட்டமின் பி6
இது நோய்த்தொற்றை உருவாக்கும் வெள்ளை இரத்த அணுக்களை எதிர்த்துப் போராட வைட்டமின் பி6 முக்கியமானதாகும். எனவே வைட்டமின் பி6 நிறைந்த வாழைப்பழங்கள், கொண்டைக்கடலை மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்
வைட்டமின் சி
இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உட்கொள்ளல் சளியின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்கிறது. எனவே உணவில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்க்கலாம்
வைட்டமின் டி
இவை வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க இன்றியமையாததாகும். வைட்டமின் டி உடலை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே வைட்டமின் டி சத்துக்களை சூரிய ஒளியின் மூலம் பெறலாம் அல்லது உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்
வைட்டமின் ஈ
இது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே உணவில் நட்ஸ், விதைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளைச் சேர்க்கலாம்