கோடையில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது?

By Devaki Jeganathan
13 May 2024, 16:30 IST

சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தாலும், பெரும்பாலான பகுதியில் வெயில் இன்னும் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், சில காய்கறிகள் கோடை காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம்.

இஞ்சி

கோடையில் இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இஞ்சியில் உள்ள இயற்கையான பண்புகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

வெங்காயம்

பெரும்பாலான வீடுகளில் வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோடையில் இதை அதிகமாக உட்கொள்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். அதிகமாக இதை சாப்பிடுவது உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை ஏற்படுத்தும்.

இலை காய்கறிகள்

கோடை காலத்தில் கீரைகள், இலை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இலை காய்கறிகளில் அதிக புரதச்சத்து உள்ளது. புரதம் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

கேரட்

கோடையில் கேரட் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கேரட் சூடான தன்மை கொண்டது. இதன் காரணமாக உடல் சூட்டை அதிகரிக்கிறது.

முள்ளங்கி

கோடையில் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முள்ளங்கி இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இதன் காரணமாக உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் இருக்கலாம்.

அசைவம்

காய்கறிகளைத் தவிர, கோடையில் அசைவத்தை அதிகமாக சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். அசைவம் சாப்பிடுவதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.