காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் எந்தவகை தண்ணீர் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதுகுறித்து பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் எந்த தண்ணீர் குடிக்கலாம்?
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தேவைப்பட்டால் அதில் சிறிது எலுமிச்சை கலந்து குடிப்பது கூடுதல் சிறப்பு.
நச்சுக்கள் நீங்கும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
பல்வலி நிவாரணம்
பல்வலியில் இருந்து விடுபடவும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கவும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். தேவைப்பட்டால் இதில் சிறிது உப்பு சேர்க்கலாம்.
ஆரோக்கியமான செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி
காலையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அதேபோல் எடை இழப்புக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.