உடலில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு ஹீமோகுளோபின் அவசியமாகும். ஆனால், இன்று பலரும் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகளால் போராடி வருகின்றனர். உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் உணவுகளைக் காணலாம்
மாதுளை
வாரத்திற்கு இரண்டு முறை ஒரு மாதுளையை உட்கொண்டு வருவது ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது
பீட்ரூட்
பீட்ரூட் உட்கொள்வது ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சிறந்த வழியாகும். இதில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்து மற்றும் இயற்கை நைட்ரேட்டுகள் சிறந்த இரத்த ஓட்டம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை ஊக்குவிக்க உதவுகிறது
முளைக்கப்பட்ட பயிறுகள்
அன்றாட உணவில் முளைக்கப்பட்ட பயிறுகளைச் சேர்ப்பது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது
கறிவேப்பிலை
இது இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாகும். இவை இரண்டுமே ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும்
பேரீச்சம்பழம்
இது உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் இரும்புச் சத்து நிறைந்த ஆதாரமாகும்