வைட்டமின் ஈ குறைபாட்டை சரிசெய்யும் உணவுகள்

By Gowthami Subramani
03 Sep 2024, 09:21 IST

வைட்டமின் ஈ குறைபாட்டைச் சரி செய்ய வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகளை உட்கொள்ளலாம். இதில் வைட்டமின் ஈ குறைபாட்டிற்கு சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்

பாதாம்

பாதாம் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது ஊட்டச்சத்துக்கான தினசரி தேவையை பூர்த்தி செய்கிறது

சூரியகாந்தி விதைகள்

இது வைட்டமின் E இன் ஆற்றல்மிக்கவையாகும். தினசரி உணவில் ஸ்மூத்தி, தானியங்கள் அல்லது சாலட்களாக எடுத்துக் கொள்வது வைட்டமின் ஈ குறைபாட்டை சரி செய்கிறது

அவகேடோ

அவகேடோ பழம் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதனை தினந்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் ஈ குறைபாட்டை ஈடுசெய்யலாம்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை நீண்ட நேரம் முழுமையாக வைக்கிறது

மீன்

இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மூலமாகும். இவை உடல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். இதன் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

சிவப்பு குடைமிளகாய்

இது சுவையுடன் கூடிய வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இதனை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது