தண்ணீர் குடிக்கும் போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!!

By Devaki Jeganathan
19 May 2024, 16:40 IST

உடலில் இருந்து பல நோய்களை அகற்ற தண்ணீர் உதவுகிறது. ஆனால், பெரும்பாலும் மக்கள் தண்ணீர் குடிக்கும்போது தங்களை அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். இதனால், உடலுக்கு பல பாதிஓப்பு ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? தண்ணீர் குடிக்கும் செய்ய கூடாத விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

குளிர்ந்த நீர் குடிப்பது

அடிக்கும் வெயிலுக்கு இதமான ஜில்லென தண்ணீர் குடிப்போம். அதிக குளிர்ந்த நீரை குடிப்பதால் சளி பிடிக்கலாம். கூடுதலாக, இது உங்கள் நரம்புகளையும் சேதப்படுத்தும்.

உணவுக்கு இடையில் தண்ணீர்

பெரும்பாலும் பலர் உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கிறார்கள். இது உங்கள் செரிமான அமைப்பை மோசமாக பாதிக்கிறது. எனவே, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கவும்.

கடகடவென தண்ணீர் குடிப்பது

தாகத்தைத் தணிக்க, மக்கள் கடகடவென தண்ணீரைக் குடிப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவ்வாறு செய்வதால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். மேலும், இது வாய்வு ஏற்படலாம்.

குளிப்பதற்கு முன் தண்ணீர்

குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். பெரும்பாலும் மக்கள் குளித்த உடனேயே தண்ணீரைக் குடிக்கத் தொடங்குகிறார்கள். இது அவர்களின் உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும்.

நின்றபடி தண்ணீர் குடிப்பது

நம்மில் பலர் நின்றபடி தண்ணீர் குடிப்போம். ஆனால், அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. தண்ணீரை உட்காந்து சிப் சிப்பாக குடிக்க வேண்டும்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

நாள் முழுவதும் சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் அருந்தவும்.