தர்பூசணி சாப்பிட்ட பின் இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

By Devaki Jeganathan
23 May 2024, 12:32 IST

வெயில் காலத்தில் நம்மில் பலர் அடிக்கடி தர்பூசணி சாப்பிடுவோம். ஆனால், தர்பூசணி சாப்பிடும் போது சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தர்பூசணி சாப்பிட்ட பின் சிலவற்றை சாப்பிட கூடாது. அவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பால் குடிக்க வேண்டாம்

தர்பூசணி சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட பால் சாப்பிடக்கூடாது. தர்பூசணியில் வைட்டமின் சி இருப்பதால், அது பால் பொருட்களுடன் வினைபுரிந்து வாயு மற்றும் வயிறு வீக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிக புரத உணவுகள்

தர்பூசணியை உட்கொண்ட பிறகு அதிக புரத உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

முட்டை சாப்பிட வேண்டாம்

முட்டை மற்றும் தர்பூசணி இரண்டும் வெவ்வேறு விளைவுகளைக் கொண்டுள்ளன. இந்நிலையில், நீங்கள் தர்பூசணிக்குப் பிறகு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு கலவைகளும் சேர்ந்து வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

உப்பு உணவுகள்

தர்பூசணியுடன் உப்பு சாப்பிடக்கூடாது. இதனால், தர்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படாமல், பிபியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தயிர் சாப்பிட வேண்டாம்

தர்பூசணி சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தர்பூசணி மற்றும் தயிர் கலவையானது உடலுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படும்.

நட்ஸ் சாப்பிட வேண்டாம்

தர்பூசணி சாப்பிட்ட உடனே நட்ஸ் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த உணவு கலவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.