பால் குடித்தப் பிறகு என்ன சாப்பிடக் கூடாது?

By Karthick M
09 Oct 2024, 22:17 IST

பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இருப்பினும் பால் குடித்த பிறகு பல விஷயங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது மிக மிக நல்லது.

அசைவம்

பாலுக்கு பின் அசைவம் சாப்பிடக் கூடாது. அசைவத்தின் தன்மை சூடு, பாலின் தன்மை குளிர்ச்சி. இதை சேர்ந்து சாப்பிட்டால் வயிற்று உபாதைகள், அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சிட்ரஸ் பழங்கள்

பால் குடித்த பிறகு புளிப்பு சுவை உடைய பழங்களை சாப்பிட கூடாது. இதனால் செரிமான மண்டலம் சீர்குலைந்து வாயு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தர்பூசணி

பால் குடித்த பிறகும் தர்பூசணி சாப்பிடக்கூடாது. இதனால் உடலில் நச்சுக்கள் உற்பத்தியாகி, வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம் என உடலில் பல வகையான பாதிப்புகள் ஏற்படும்.

எலுமிச்சை ஜூஸ்

பால் குடித்த பிறகு எலுமிச்சை ஜூஸ் தவிர்க்க வேண்டும். இது வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உப்பு

பாலுக்குப் பிறகு உப்பை உட்கொள்வதால், உடலில் ரிங்வோர்ம், அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.