உணவில் சிவப்பு உணவுகளைச் சேர்ப்பது புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த உணவில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது
ஸ்ட்ராபெர்ரிகள்
இதில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
தர்பூசணி
இது நீரேற்றம் மட்டுமல்லாமல் லைகோபீன் மற்றும் சிட்ரூலினைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது இதயத்தைப் பாதுகாக்க உதவும் சிறந்த தேர்வாக அமைகிறது
தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபீன் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளுக்கு உதவும் ஆக்ஸிஜனேற்றியாகும். எனவே உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
பீட்ரூட்
பீட்ரூட்டில் அதிக நைட்ரேட்டுள் உள்ளது. இவை உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் பீட்டாலைன்கள் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
மாதுளை
மாதுளையில் உள்ள அந்தோசயினின்கள் மற்றும் பாலிபினால்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கூடுதல் தேர்வாகும்
சிவப்பு குடைமிளகாய்
இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற்றுநோயைத் தடுப்பதற்கு உதவுகிறது
உணவில் இந்த சிவப்பு உணவுகளைச் சேர்ப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் கணிசமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது