அதிக புரதம் நிறைந்த நட்ஸ் வகைகளை உட்கொள்வது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் அதிக புரத நட்ஸ் வகைகளை காண்போம்.
பாதாம்
இது சுவையான நட்ஸ் வகையாக மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். அதன் படி, கால் கப் அளவிலான பாதாம், 7 கிராம் அளவிலான புரதத்தைத் தருகிறது.
முந்திரி
இதன் கிரீமி அமைப்பு பலரையும் கவர்வதுடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய நட்ஸ் வகையாகக் கருதப்படுகிறது. இதில் ஏராளமான புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் படி, 1/4 கப் அளவிலான முந்திரியில் 5 கிராம் புரதங்கள் நிறைந்துள்ளது.
வால்நட்ஸ்
இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகையாகும். இவை ஓரளவு புரதத்தையும் வழங்குகிறது. அதன் படி கால் கப் அளவிலான வால்நட்ஸ் பருப்பில் 5 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது.
பிஸ்தா
பிஸ்தா பருப்பும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. கால் கப் அளவிலான பிஸ்தா பருப்பில் 6 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது.
வேர்க்கடலை
புரத உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, வேர்க்கடலை சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதன் படி, கால் கப் அளவிலான வேர்க்கடலையில் 9.5 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது.