தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்கள் முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். முகப்பரு இருக்கும் போது சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. பருக்கள் இருக்கும் போது எதைச் சாப்பிடக்கூடாது என இங்கே பார்க்கலாம்.
துரித உணவு & நொறுக்குத் தீனி
ஜங்க் ஃபுட்கள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடாதீர்கள். இவை சரும பிரச்சினையை அதிகரிக்கும். சிப்ஸ், கிரிஸ்ப்ஸ், பாஸ்தா, பீட்சா போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள்.
பால் பொருட்கள்
பருக்கள் இருந்தால் பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால், உங்கள் சரும பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
காரமான உணவு
அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது பருக்கள் பிரச்சனையை ஏற்படுத்தும். பருக்கள் பிரச்சனை இருந்தால், எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட உணவு
சுத்திகரிக்கப்பட்ட மாவு, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். இதன் காரணமாக பருக்கள் பிரச்சனை வேகமாக அதிகரிக்கிறது.
இனிப்பு
சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகளை அதிகம் சாப்பிட வேண்டாம். இதனால், முகப்பருக்கள் பிரச்சனையும் அதிகரிக்கிறது. நீங்கள் இனிப்பு உணவை விரும்பினால், புதிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை குடிக்கவும்.
புரோட்டீன் பவுர்
பலர் புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அதிக அளவு புரோட்டீன் பவுடரை உட்கொள்வது முகத்தில் பருக்கள் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
கூடுதல் குறிப்பு
உங்கள் சருமத்தை பருக்கள் இல்லாமல் மற்றும் பளபளப்பாக மாற்ற விரும்பினால், வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், நிறைய தண்ணீர் குடிக்கவும், புதிய பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடவும்.