தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு அருந்துவது சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இது இரைப்பை ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதைத் தடுக்கிறது .
வழக்கமாக 10 முதல் 11 மணிக்குள் தூக்கம் செல்லும் பழக்கம் இருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 8 மணி வரை இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.
9 மணிக்குப் பிறகு இரவு உணவு உண்பது உடல் நலத்திற்கு கேடானது. ஏனெனில் செரிமானம் நடக்க சுமார் 1.5-2 மணிநேரம் ஆகும் என்பதால், இது செரிமான சிக்கலை ஏற்படுத்தும்.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை இரவு உணவு சாப்பிட முடியாவிட்டால், லேசான உணவை மட்டுமே சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்க வேண்டும். இதனால் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.