நம்மில் பலர் உடல் எடையை குறைக்க சாலட் சாப்பிடுவோம். ஆனால், அதை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே நமக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் செய்யும் சிறிய தவறு, நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சாலட் சாப்பிடும் போது செய்ய கூடாத விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
உணவுடன் சாலட்
பெரும்பாலும் மக்கள் பருப்பு மற்றும் ரொட்டியுடன் சாலட் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இதை செய்ய வேண்டாம். இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சாலட் சாப்பிடுங்கள்.
இரவில் பழ சாலட்
இரவில் தவறுதலாக கூட பழ சாலட் சாப்பிடக்கூடாது. பகலில் பழ சாலட் சாப்பிடுவது நல்லது. இரவில் பழ சாலட் சாப்பிடுவதால், உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
சாலட்டில் தயிர்
சிலர் தக்காளி மற்றும் வெள்ளரியுடன் தயிர் கலந்து பலர் சாப்பிடுவார்கள். இவற்றை சாப்பிடுவதால், செரிமானத்தின் சமநிலை பாதிக்கப்படும். மேலும், இது அமிலத்தன்மையையும் அதிகரிக்கும்.
வெள்ளரி & தக்காளி
இவை இரண்டையும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த கலவையை ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
முளைகட்டிய பயிர்
பலர் சாலட்களில் முளைகட்டிய பயிர்களை சேர்ப்பது வழக்கம். ஆனால், அவற்றை அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. சரியான அளவில் இதை தினசரி உணவாக உண்ணலாம்.
சீஸ் மற்றும் மயோனைஸ்
பலர் சாலட்களை அலங்கரிக்கும் போது சீஸ் மற்றும் மயோனைஸ்களை பயன்படுத்துவார்கள். இவற்றை சாலட்டில் சேர்ப்பதால் சாலட்டின் ஊட்டச்சத்து மதிப்பு குறையும்.
உப்பு மற்றும் சாட் மசாலா
சாலட் எவ்வளவு எளிமையாக உள்ளதோ, அவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்பு மற்றும் சாட் மசாலா கலந்து சாலட் சாப்பிடுவதால் அதன் சத்துக்களை குறையலாம். எனவே, வெறும் எலும்பிச்சை சாறு மட்டும் சேர்ப்பது நல்லது.