வெள்ளரிக்காய் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
10 Jan 2024, 10:48 IST

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது சளி, இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனையை அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது என்பதால், இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நுரையீரலில் சளி சேர்ந்து இருமல் வரக்கூடும்.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது சரியான தேர்வு அல்ல. ஏனெனில் இது உங்கள் குடல் இயக்கங்களை அழுத்துகிறது, உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுகிறது.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

வெள்ளரிக்காய் இரவில் உடலை குளிர்ச்சியாக வைத்து கப தோஷ பிரச்சனையை அதிகரிக்கிறது. மொத்தத்தில், இரவில் வெள்ளரி சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

பகலில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

வெள்ளரிக்காயை பகலில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், வயிற்று பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. இருப்பினும், நீங்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், வெள்ளரி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

வெள்ளரி சாப்பிட சரியான நேரம் எது?

வெள்ளரிக்காய் சாப்பிட சிறந்த நேரம் பகலில். வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.