காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. இது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். எனவே சரியான நேரத்தில் காலை உணவை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த தினத்தை ஆரோக்கியத்தோடு தொடங்கலாம்.
காலை உணவு உண்ண சரியமான நேரம் எது?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உணவை காலை 7 முதல் காலை 8 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உணவை ஜீரணிக்க உடலுக்கு நேரம் கொடுக்கிறது.
காலை உணவு சாப்பிடக் கூடாத நேரம்?
9 மணிக்கு பிறகு நீங்கள் ஒருபோதும் காலை உணவை உட்கொள்ளக்கூடாது. வயிற்றுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் இது நல்லதல்ல. காலை உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.
எடை குறைக்க உதவும்
காலை உணவுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க பலர் காலை உணவை தவிர்க்கிறார்கள். இது உண்மையல்ல, காலை உணவை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் உடல் எடையை குறைக்க முடியாது.
அதிகமாக சாப்பிடக் கூடாது
காலை உணவை உண்பதால் நாள் முழுவதும் பசி குறைகிறது. எனவே நீங்கள் குறைவான உணவை உண்கிறீர்கள். மீண்டும் பசி ஏற்படாமல் இருக்கும்.
சர்க்கரை நோய் அபாயம்
தினமும் காலை உணவை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம். காலை உணவு மூலம் சர்க்கரை நோய் 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
காலை உணவாக பழங்கள், சாலட், ஓட்ஸ், உப்மா போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளலாம். எண்ணெய் உணவு, பொரித்த உணவை காலையில் சாப்பிடவேக் கூடாது.