பல்வேறு காரணங்களுக்காக சப்ளிமென்ட்ஸை பலர் எடுக்கிறார்கள். ஆனால் சப்ளிமென்ட் எடுக்க சரியான வயது எது என பார்க்கலாம்.
ஆரோக்கியமாக இருக்க, சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம். சரிவிகித உணவின் மூலம் கூட ஊட்டச்சத்துக் குறைபாட்டை பூர்த்தி செய்யலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்து வழங்குவது நல்லது. இது குறைபாடு ஏற்படும் போது சப்ளிமென்ட் எடுக்கலாம்.
இருபது முதல் முப்பது வயதிற்குள், உடலில் ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம். இவர்களுக்கு சப்ளிமென்ட் எடுக்கலாம்.
கர்ப்ப காலத்தில், உடலில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்ய சப்ளிமென்ட் எடுக்கலாம்.
40 முதல் 50 வரை எலும்பு மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இதை சரிசெய்ய சப்ளிமென்ட் எடுக்கலாம்.