தியானம் செய்ய சரியான நேரம் எது?

By Devaki Jeganathan
29 Jul 2024, 16:30 IST

உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தை குறைக்க நம்மில் பலர் தியானத்தின் உதவியை நாடுவோம். ஆனால், தியானம் செய்வதற்கு சரியான நேரம் எது என தெரியாது. இதற்கான பதில் இங்கே.

எப்போது தியானம் செய்யனும்

பலர் காலையில் எழுந்தவுடன் தியானம் செய்ய விரும்புகிறார்கள். காலை நேரம் அமைதியும் நிதானமும் நிறைந்தது. இது நாள் முழுவதும் உங்களுக்கு புத்துணர்ச்சியையும் நேர்மறையையும் அளிக்கும்.

தியானம் செய்ய சரியனான நேரம்

உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து தியானம் செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இதற்கு முன்பே நீங்கள் தியானம் செய்யலாம். இதுவும் சரிதான்.

எந்த நேரம் சிறந்தது

காலை அல்லது இரவு தியானம் செய்ய சிறந்த நேரமாக கருதப்படுகிறது. காலையில் பல் துலக்கிய பின் அல்லது இரவு உணவுக்குப் பின் தியானம் செய்யலாம்.

இசையுடன் தியானம்

தியானம் செய்ய இசையின் உதவியையும் பெறலாம். இது அதிக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதற்கு மெல்லிய குரலில் ஒரு பாடலை வாசித்து தியானம் செய்யுங்கள்.

தியானத்திற்குப் பிறகு

தியானம் செய்த பின் திடீரென எழுந்திருக்க வேண்டாம். முதலில் உங்கள் கண்களை மெதுவாக திறந்து வசதியாக எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

சரியான இடம்

தியானத்திற்கு சரியான இடத்தை தேர்வு செய்யவும். சத்தமில்லாத அல்லது நெரிசலான இடங்களில் தியானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு தோட்டம் அல்லது வெற்று அறையை தேர்வு செய்யலாம்.

மனதை அமைதி

தியானம் செய்ய, மனதை அமைதியாக வைத்திருப்பது மிக முக்கியமான விஷயம். இதற்காக, உங்கள் மனதில் இருந்து கெட்ட எண்ணங்களை அகற்றி, உங்கள் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்யுங்கள்.