அன்னாசிப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே காண்போம்.
மனச்சோர்வுக்கு தீர்வாக
அன்னாசிபழத்தில் வைட்டமின் பி ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இவை மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது.
செரிமான மேம்பாட்டிற்கு
அன்னாசியில் ப்ரோமெலைன் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகிறது.
சருமத்திற்கு நன்மை
அன்னாசிபழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தருகிறது. இவை சருமத்திற்குத் தேவையான முக்கிய புரதமாகும்.
இதய ஆரோக்கியம்
அன்னாசிபழம் கணிசமான வைட்டமின் பி1 உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது இதய செயல்பாட்டை சாதகமாக பாதிக்கிறது. அதாவது இதன் வைட்டமின் சி உள்ளடக்கம் இரத்த நாளங்களை வலுவாக வைப்பதுடன், இதயம் மற்றும் வாஸ்குலார் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்க உதவுகிறது.
மூளை செயல்பாடு
மூளைத் திறனை ஆதரிக்க உதவும் பானங்களில் அன்னாசிப்பழச் சாறு சிறந்த பானமாகும். இதில் உள்ள வைட்டமின் சி சத்துகள் நினைவாற்றல் மற்றும் செறிவு மேம்பாட்டில் பங்களிக்கிறது. மேலும், இவை நல்ல மன சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இவை மூளை செயம்பாட்டை ஆதரிப்பதாக அமைகின்றன.
ஆற்றல் மேம்படும்
அன்னாசி பழத்தை சாப்பிடுவது உடல் சோர்வடைவதில் இருந்தும், மந்தத் தன்மையிலிருந்தும் விடுபட வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் உடல் சோர்வைக் குறைத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள மாங்கனீசு தாதுக்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.