மாதுளையை இப்படி சாப்பிட்டால் 2 மடங்கு பலன் கிடைக்கும்!

By Devaki Jeganathan
29 Aug 2024, 09:04 IST

மக்கள் பெரும்பாலும் மாதுளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில், உள்ள சத்துக்கள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மாதுளையில் பல சத்துக்கள் உள்ளன. மாதுளையை எப்படி சாப்பிடணும் என பார்க்கலாம்.

மாதுளையின் பண்புகள்

நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம், வைட்டமின் சி, பி மற்றும் கே போன்ற சத்துக்கள் மாதுளையில் உள்ளன. இதை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

மாதுளையை எப்படி சாப்பிடுவது?

மாதுளை விதைகளை சாறு வடிவிலும் சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

சிறுநீரகங்களுக்கு நல்லது

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. இதை உட்கொள்வது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கற்களைத் தடுக்கிறது.

எடை குறைய உதவும்

மாதுளையில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இதை உட்கொள்வது தொப்பை மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் மாதுளையில் உள்ளன. இதை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

இதயத்திற்கு நல்லது

மாதுளையில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.