எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?

By Devaki Jeganathan
27 Feb 2024, 17:49 IST

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே, எந்தெந்த பணிகளுக்குப் பிறகு நீங்கள் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

நீர் நமக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சு பொருட்கள் அகற்றும். இது தோல் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். எந்தெந்த பணிகளுக்குப் பிறகு அல்லது அதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

காலையில் எழுந்தவுடன்

காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். ஏனென்றால், இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருப்போம். இதனால், உணவுப்பாதை வறண்டு இருக்கும். எனவே, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

குளிப்பதற்கு முன்

குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும். இது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராகும்.

சாப்பிடுவதற்கு முன்

உணவின் போது மற்றும் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது பெரும்பாலும் தவறாக கருதப்படுகிறது. ஆனால், நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம். இது உடலில் உள்ள இரைப்பை குடலை சுத்தப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தூங்கும் முன்

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும். இது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, நீங்கள் இரவு முழுவதும் நீரேற்றமாக இருப்பீர்கள்.

உடற்பயிற்சிக்கு முன்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் தண்ணீரையும் குடிக்க வேண்டும். ஏனென்றால், உடற்பயிற்சி செய்யும் போது உடல் அதிகமாக வியர்க்கிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவும்.

சிறுநீர் கழித்த பின்

பலரும் சிறுநீர் கழித்த பின் தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம். சிறுநீரகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேற்ற பட்ட பின், அதன் கசடு அல்லது உப்பு சிறுநீரக சுவரில் படியும். எனவே, சிறுநீர் கழித்த பின் தண்ணீர் குடிப்பதாள் இதை தவிர்க்கலாம்.