சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஜூஸ் நல்லது?

By Devaki Jeganathan
10 Sep 2024, 13:31 IST

தவறான உணவுப் பழக்கத்தால் சர்க்கரை நோய் பிரச்சனை அதிகரிக்கிறது. இந்நிலையில், நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில ஜூஸ்களை உட்கொள்ளலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தக உதவும் ஜூஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் ஜூஸ் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாகற்காயில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, தயாமின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி உள்ளன.

முள்ளங்கி ஜூஸ்

முள்ளங்கி ஜூஸ் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. முள்ளங்கியைத் தவிர, இதன் இலைகளின் சாறும் அருந்தினால் உடல் நோய்கள் குணமாகும்

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் குடிப்பதால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வெள்ளரி சாறு

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். முட்டைக்கோஸ் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆன்டி-ஹைப்பர் கிளைசெமிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.