காலநிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்படுகிறார்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும் போது உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் உள்ளபோது நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பூண்டு
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. மேலும், சுவாசகுழாய் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் இது உதவும். காய்ச்சல் உள்ள போது பூண்டு பயன்படுத்தி செய்யப்படும் கஷாயம் மற்றும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
கொட்டைகள் மற்றும் விதைகள்
உங்கள் உணவில் கொட்டைகள் அல்லது விதைகளைச் சேர்க்கவும். அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளையும், ஜீரணிக்க எளிதாக இருக்கும் பருவகால பழங்களையும் சாப்பிடுங்கள்.
சிக்கன் சூப்
புரதத்தின் சிறந்த மூலமாக சிக்கன் உள்ளது. சிக்கன் சூப், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களையும் கொண்டுள்ளது. சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளவர்கள் சிக்கன் சூப்பில் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேன்
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு அதிகம் உள்ளது. இது சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
டீ
காஃபின் உள்ள டீயை குடிக்கையில் உடலின் நீரிழப்பு குறைகிறது. மேலும், தொண்டைப்பகுதி மற்றும் சுவாச குழாயில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
இஞ்சி டீ
பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட இஞ்சி, உடல் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு நல்லது. காய்ச்சல் உள்ளபோது உண்டாகும் குமட்டல் பிரச்சனைகளை சமாளிக்க இஞ்சி டீ மிகவும் நல்லது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டு அதிகமாக உள்ளது. இதை காய்ச்சலின் போது சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து, நம் செரிமான செயல்பாட்டை சீராக்குவதோடு, அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சனையையும் தடுக்கிறது.