பல்வேறு முக்கிய செயல்பாடுகளை கொண்ட கல்லீரலை பாதுகாப்பாக வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். சில பானங்களின் மூலம் கல்லீரலை பாதுகாக்கலாம்.
கேரட் ஜூஸ்
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கேரட் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலின் நச்சுகளை நீக்குகிறது. கேரட் சாறு கல்லீரலில் பித்தம் மற்றும் கொழுப்பு திரட்சியை குறைக்க உதவுகிறது. கேரட் சாற்றில் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. கல்லீரலையும், பெரிய குடலையும் சுத்தமாக வைத்திருக்க இது உதவும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உடலுக்கு நன்மை பயக்கும் பல நன்மைகள் உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ட்ரூட் சாறு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கல்லீரல் நலனுக்கு இது வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர் பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ சமீபகாலமாகவே பல்வேறு நன்மைகளுக்கு பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இதிலும் இணைந்துள்ளது கிரீன் டீ. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும். உடலில் உள்ள கொழுப்பை எரிக்க கிரீன் டீ மிகவும் உதவுகிறது. இது கல்லீரலின் சுமையை ஓரளவு குறைக்கிறது. முடிந்தவரை கிரீன் டீயை சர்க்கரை போடாமல் குடியுங்கள்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை
இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எடை இழப்பு செயல்முறையையும் அதிகரிக்கிறது. இது வாய்வு பிரச்சனையை நீக்குகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய்களைத் தடுக்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கல்லீரல் மற்றும் குடல்களை சுத்தப்படுத்த உதவுகின்றன. செரிமானத்தை மேம்படுத்துகிறது.