உடல் ஹீமோகுளோபின் அளவு
உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனை சிறப்பாக வழங்க போதுமான ஹீமோகுளோபின் அளவு என்பது மிக முக்கியம். ஆண் மற்றும் பெண்ணுக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஆண்களில் ஹீமோகுளோபின் அளவு
ஆரோக்கியமான ஆண் உடலில் சாதாரண ஹீமோகுளோபின் அளவு 14 முதல் 18 கிராம்/டிஎல் இருக்க வேண்டும்.
பெண்களின் ஹீமோகுளோபின் அளவு
ஆரோக்கியமான பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 16 கிராம்/டிஎல் இருக்க வேண்டும்.
பீட்ரூட் சாறு
ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை ஏற்படலாம். இதை சரிசெய்ய இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் நிறைந்த பீட்ரூட் சாற்றை உட்கொள்ளலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் உள்ளது. இதனை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
மாதுளை, கேப்சிகம்
மாதுளை சாறு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெருமளவு உதவும். அதேபோல் கேப்சிகம் எனப்படும் கொடை மிளகாயை உட்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளன.