காதலர் வாரத்தில் 6-வது நாளான இன்று கட்டியணைக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது மனதிற்கு பிடித்தவர்களை வெறும் 20 நொடிகள் கட்டியணைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம்
கட்டிப்பிடிப்பது ஆன்மாவுக்கு மட்டும் நல்லது அல்ல; இதயத்திற்கும் நல்லது. கட்டிப்பிடிப்பது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம் நீங்கும்
கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும். கட்டிப்பிடிப்பதால், உங்கள் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இது மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. கார்டிசோல் சரியாக இருந்தால், அது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனை குறையும்.
இரத்த ஓட்டத்தை மேம்படும்
கட்டிப்பிடிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். இதன் காரணமாக ஆக்ஸிஜனும் உடலுக்கு சரியாக வழங்கப்படுகிறது.
நினைவாற்றல் அதிகரிப்பு
கட்டிப்பிடிப்பது நமது நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது. இது உடலில் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, இது மன அழுத்தத்தை நீக்குகிறது மற்றும் மனதைக் கூர்மைப்படுத்துகிறது.
சிறந்த தூக்கம்
உங்கள் அன்பானவரை நீங்க 20 நிமிடம் கட்டியணைப்பதால், மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலை அமைதியாக வைக்கிறது. இதனால், இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கட்டிப்பிடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதாவது லிம்போசைட்டுகள் போன்ற இயற்கையான கொலையாளி செல்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.