குளிர்ந்த நீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் குளிர்ந்த நீர்அருந்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்
செரிமான பிரச்சினைகள்
குளிர்ந்த நீர் அருந்துவது உணவில் உள்ள கொழுப்பை திடப்படுத்தி, ஜீரணிக்க கடினமாக்குகிறது, இதனால், வயிற்றுப் பிடிப்பு, அசௌகரியம் மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படுகிறது
அதிகரித்த இதயத்துடிப்பு
குளிர்ந்த நீர் குடிக்கும் போது, உடல் வெப்பநிலையை பராமரிக்க ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்நிலையில் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது
பற்களில் வலி
உணர்திறன் வாய்ந்த பற்கள் கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்தும் போது பற்களில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது
குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி
குளிர்ந்த நீரை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம்
சுயநினைவை இழப்பது
வெப்ப சோர்வின் போது, குளிர்ந்த நீர் அருந்துவது வேகஸ் நரம்புகளை செயல்படுத்துகிறது. இது சுயநினைவை இழக்க வழிவகுக்கிறது
மெதுவான நீரேற்றம்
குளிர்ந்த நீரை அதன் மைய வெப்பநிலைக்கு சூடாக்குவதற்கு, உடல் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். இது திரவங்கள் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது