உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக புரதம் உள்ளது. ஆனால், இதை அதிகளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதில் அதிகம் புரதம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் காணலாம்
எடை அதிகரிப்பு
உடலுக்குப் போதுமான அளவிலான புரதத்தை எடுத்துக் கொள்வது எடை மேலாண்மைக்கு உதவும். ஆனால், அதிகளவு புரதம் உடல் எடையை அதிகரிக்கக்கூடும்
செரிமான பிரச்சனைகள்
அதிக புரத உட்கொள்ளல், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகளிலிருந்து பெறப்படும் புரதம் காரணமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
நீரிழப்பு
அதிகளவு புரதம் எடுத்துக் கொள்வதால், அது சிறுநீர் வழியாக நீரிழப்பை ஏற்படுத்துகிறது. போதுமான திரவ உட்கொள்ளலை பராமரிக்காவிட்டால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்
சிறுநீரகங்களில் அழுத்தம்
புரத உட்கொள்ளல் அதிகரிப்பினால், சிறுநீரகங்களால் வடிகட்டப்பட வேண்டிய கழிவுப்பொருள்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இது சிறுநீரக அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்
ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள்
புரத உட்கொள்ளலில் அதிக கவனம் செலுத்துவது, கொழுப்புகள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கலாம்
எலும்பு சார்ந்த பிரச்சனை
மிக அதிக புரத உட்கொள்ளல் எலும்புகளிலிருந்து கால்சியத்தை வெளியேற்றக்கூடும். இது எலும்பு ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். மேலும் இவை ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கலாம்
உடல் சோர்வு
அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவது உடலை சோர்வடையச் செய்யலாம். ஏனெனில், புரதம் செரிமானம் அடைய அதிக நேரம் எடுக்கலாம்