இரவு உணவைத் தவிர்த்தால் என்ன ஆகும் தெரியுமா?

By Devaki Jeganathan
20 Mar 2024, 08:17 IST

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு மிகவும் அவசியம். இது உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. ஆனால், பலர் இரவு உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். இப்படி செய்வதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

டின்னரை தவிர்ப்பது நல்லதா?

இரவு உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

உடல் பலவீனம்

நமது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் வழங்க உணவு அவசியம். இரவில் உணவு உண்ணாததால், உடலில் பலவீனம் ஏற்படத் தொடங்குகிறது.

கலோரி உட்கொள்ளல் குறையும்

பல சமயங்களில் உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்போம். இதன் காரணமாக, கலோரி உட்கொள்ளல் முழுமையாக குறையும்.

மன அழுத்தம் அதிகரிக்கும்

இரவு உணவைத் தவிர்ப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சில நேரங்களில் எடை அதிகரிப்பு பிரச்சனையும் காணப்படலாம்.

எடை அதிகரிக்கலாம்

இரவில் உணவு உண்ணாததால் வளர்சிதை மாற்ற விகிதம் குறையத் தொடங்குகிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

தூக்க சுழற்சியில் பாதிக்கும்

இரவில் சாப்பிடாமல் இருப்பது உடல் நலத்தை மட்டுமல்ல தூக்கத்தையும் பாதிக்கிறது. இது உங்கள் தூக்க சுழற்சியை கெடுக்கும்.

லேசான இரவு உணவு

இரவு உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, லேசான இரவு உணவையும் கனமான காலை உணவையும் சாப்பிடலாம். இது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.