மக்கானா லேசான, மொறுமொறுப்பான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டியாகும். ஆனால், அதிகமாக சாப்பிடுவது எதிர்பாராத சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் மக்கானாவை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் காணலாம்
எடை அதிகரிப்பு
மக்கானாவில் குறைந்த கலோரிகள் இருந்தாலும், இதை அதிகம் உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். குறிப்பாக சுவையூட்டப்பட்ட அல்லது வறுத்த மக்கானாவை எடுத்துக் கொள்ளும் போது எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்
அதிகளவு இரத்த சர்க்கரையைக் குறைப்பது
மக்கானா இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், இதை அதிகளவு உட்கொள்வது சர்க்கரை அளவை மிகவும் குறைத்து, தலைச்சுற்றல் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தலாம். நீரிழிவு அல்லது மருந்து எடுத்துக் கொள்பவராக இருப்பின் மக்கானா உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
வீக்கம், மலச்சிக்கலை ஏற்படுத்த
அதிகப்படியான மக்கானாவை உட்கொள்வது வயிற்றில் கடினமாக இருக்கும். இது வீக்கம், மலச்சிக்கல் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதை சமநிலைப்படுத்த போதுமான அளவு தண்ணீர் குடிக்கலாம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்லலாம்
சிறுநீரகங்களுக்கு அழுத்தம்
மக்கானாவில் நிறைந்துள்ள பொட்டாசியம் உடலுக்கு நன்மை தருவதாக இருப்பினும், அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு கடினமாக இருக்கலாம். குறிப்பாக சிறுநீரக பிரச்சனைகள் இருப்பின் உடல் அதிகப்படியான தாதுக்களை வெளியேற்ற உதவும் வகையில் நீரேற்றமாக இருக்க வேண்டும்
ஊட்டச்சத்து சமநிலையின்மை
மக்கானாவை அதிகம் உட்கொள்வதால், சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். எனவே உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பல்வேறு பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்களைச் சேர்க்கலாம்