முந்திரியில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனினும் முந்திரியை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்
அதிக உடல் எடை
முந்திரி பருப்பில் கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான நிறைவுறா கொழுப்புகள் உள்ளன. இவை உடல் எடை அதிகரிப்பு அபாயத்தை உன்டாக்கலாம்
நச்சுத்தன்மை கொன்டது
மேல் ஓடுகள் நீக்கப்படாத, பச்சை முந்திரியை எடுத்துக் கொள்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு ஓடுகள் நச்சுத்தன்மை கொண்டதே காரணமாகும்
புற்றுநோய்
முந்திரியில் உள்ள வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதன் நிறைவுறா கொழுப்புகளால் இரத்த நாளங்களில் ஏற்படுத்தும் பிரச்சனை புற்றுநோய் அபாயத்தை உண்டாக்குகிறது
தலைவலி
முந்திரியில் உள்ள டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் போன்றவை தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் தீவிரமடையச் செய்கிறது
சிறுநீரகக் கற்கள்
முந்திரியில் ஏராளமான ஆக்ஸலேட் உப்புகள் உள்ளது. இது உடல் கால்சியத்தை உறிஞ்சும் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கிறது. இந்த உறிஞ்சப்படாத கால்சியம் சிறுநீரக கற்கள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது
உயர் இரத்த அழுத்தம்
முந்திரி பருப்புகளில் சோடியம் அதிகளவு உள்ளது. இதனை அளவோடு எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆனால் அதிகளவு சோடியம் உட்கொள்ளல் இரத்த அழுத்த பிரச்சனைகளை உண்டாக்கலாம்
ஒவ்வாமை பிரச்சனை
மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பினால் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையே ஒவ்வாமை ஆகும். முந்திரி பருப்புகளை அதிகம் சாப்பிடுவது ஒவ்வாமை பிரச்சனையை அதிகமாக்கலாம்