தினமும் எள் விதை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
03 Nov 2024, 12:41 IST

தினமும் எள் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதில் தினமும் எள் விதைகள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

எள் விதைகளில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

எள் விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் டி-லிம்போசைட்டுகளை உருவாக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

எள் அதிகளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது குடல் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்

நோய் அபாயத்தைத் தடுக்க

எள் விதைகள் டோகோபெரோல் போன்ற கொழுப்பில் கரையக்கூடிய சேர்மங்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது

மேம்பட்ட இதய ஆரோக்கியத்திற்கு

எள் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகளான பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்றவை உள்ளன, இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

எள் விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது தோல் தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது

முடி ஆரோக்கியத்திற்கு

எள் விதைகளில் நிறைந்துள்ள துத்தநாகம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது

குறிப்பு

எள் விதைகள் உடலுக்கு நன்மை பயக்கும். எனினும், இதை அதிகமாக சாப்பிடுவது இரைப்பை குடல் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே மிதமான அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது