தினமும் இந்த பெர்ரி பழத்தை கட்டாயம் சாப்பிடுங்க

By Gowthami Subramani
18 Nov 2024, 08:28 IST

இனிப்பு, புளிப்பு சுவையுடன் பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட ராஸ்பெர்ரி உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் தினமும் ராஸ்பெர்ரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை மேலாண்மைக்கு

ராஸ்பெர்ரி பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை சத்தான மற்றும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் குறிப்பாக அந்தோசயினின்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது

செரிமான பிரச்சனைக்கு

இந்த பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிக்கும் பங்களிக்கிறது

புற்றுநோயை எதிர்க்க

ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஈ, அந்தோசயினின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. மேலும், இதில் உள்ள எலாஜிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது

சரும ஆரோக்கியத்திற்கு

இதன் வைட்டமின் சி சத்துக்கள் சரும செல்களை சேதப்படுத்தும் மற்றும் முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது சரும ஆரோக்கியத்திற்கு உதவும் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

ராஸ்பெர்ரியில் உள்ள அந்தோசயினின்கள் போன்ற அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதன் ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மூளை செல்களைப் பாதுகாக்கிறது