கொய்யாப்பழம் அதன் இனிப்பு சுவையுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். தினமும் 1 கொய்யாப்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் எடையை நிர்வகிக்க
ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புபவர்கள் குறைந்த கலோரி நிறைந்த கொய்யாவை உட்கொள்ளலாம். இதன் அதிக நார்ச்சத்துக்கள், நீர் உள்ளடக்கம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை கூடுதல் கலோரிகளை சேர்க்காமல் திருப்தியைத் தருகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
கொய்யாவின் அதிகளவு நார்ச்சத்துக்கள் செரிமானம் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இவை அதிகப்படியான உணவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கொய்யாவில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக, இதில் உள்ள லைகோபீன் ஆனது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதயத் திசுக்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது
பல்வலி நிவாரணத்திற்கு
கொய்யா இலைகள் அடிக்கடி பல்வலியை சந்திப்பவர்களுக்கு சிறந்த, இயற்கைத் தேர்வாகும். இதற்கு, கொய்யாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். இவை வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
காய்ச்சலை எதிர்த்துப் போராட
கொய்யா ஆனது அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக, இது நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது
தைராய்டு ஆரோக்கியத்திற்கு
தினமும் கொய்யா உட்கொள்வது தைராய்டு சுரப்பியை பராமரிக்க உதவுகிறது. கொய்யாவில் தாமிரம் நிறைந்துள்ளதால், ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கிறது