குளிர்காலத்தில் பச்சை பட்டாணி மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். பிரெஷ் பச்சை பட்டாணி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மழைக்காலத்தில் தினமும் பச்சை பட்டாணி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கே பாய்க்கலாம்.
சிறந்த செரிமானம்
பச்சைப் பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக தினசரி உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் குடல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பச்சைப் பட்டாணியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்பெறுவதோடு, பருவகால நோய்களின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கிறது.
இரத்த சர்க்கரை
பச்சைப் பட்டாணியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதனுடன் நார்ச்சத்தும் உள்ளது. இவை உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை குறையும்
பச்சை பட்டாணி சாப்பிடுவதும் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். உண்மையில், இதை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், இது அதிகப்படியான உணவைத் தடுக்கிறது.
எலும்பு வலி நீங்கும்
கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் செலினியம் என்ற தனிமம் பச்சை பட்டாணியில் உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சனைகள் நீங்கும்.
கொலஸ்ட்ரால் குறையும்
பச்சைப் பட்டாணியில் உள்ள தனிமங்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், இதய நோய் அபாயமும் பெருமளவு குறைகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கும்.
மூளை ஆரோக்கியம்
பச்சை பட்டாணியை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சைமர் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு தூக்கத்தையும் மேம்படுத்துகிறது.